ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிா் பொல்சனாரோவை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
பிரேசிலில் 2019 முதல் 2022ம் ஆண்டு வரை லிபரல் கட்சியை சேர்ந்த, ஜெயிர் போல்சனரோ அதிபராக இருந்தார். 2022ல் நடந்த தேர்தலில் லிபரல் கட்சியை வீழ்த்தி, தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனிடையே முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனரோ, ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. மேலும் அவரின் மேல்முறையீட்டு மனுக்களையும் அந்நாட்டு நீதிமன்றம் மனு தள்ளுபடி செய்தது.
இதனிடையே நாட்டைவிட்டு தப்பிச் செல்வதை தடுக்க ஜெயிா் பொல்சனாரோவை முன்கூட்டியே கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
















