புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி என பன்முகம் கொண்டவர் ஈரோடு தமிழன்பன். மரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து விளங்கிய இவர், கடந்த 2004-ம் ஆண்டு வணக்கம் வள்ளுவ என்ற கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
இந்நிலையில் 92 வயதான ஈரோடு தமிழன்பன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோயம்பேட்டில் உள்ள வீட்டில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் இலக்கிய துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்…
















