சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால் மின்கம்பம் சேதமடைந்து 5க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக பனிமூட்டமும் கடும் குளிரும் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இன்று காலை ஏற்காடு அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் பலத்த காற்றினால் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாலையில் விழுந்தது.
மரம் மின் ஒயர்களின் மீது மோதியதால் மின்கம்பம் சேதமடைந்தது. தகவல் அறிந்து சென்ற மின்சார துறையினர் மரத்தை அப்புறப்படுத்தி அறுந்துகிடந்த மின் ஒயர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் அப்பகுதியில் 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
















