சாய்பாபாவின் 100வது பிறந்தநாளை ஒட்டி, கொடைக்கானல் சாய் சுருதி ஆசிரமத்தில் ஐந்தாயிரம் பேருக்கு கம்பளி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனை சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் அனைவரும் பெற்று பயனடைந்தனர்.
மழையையும், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாய்பாபாவை தரிசித்து, பொதுமக்கள் அன்னதானம் மற்றும் கம்பளியை பெற்றுச் சென்றனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால், காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
















