திருத்தணி அருகே வெளிமாநில மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்யும் ட்ரோன் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள எல்லம்பள்ளி கிராமத்தில் கல்குவாரி பகுதியில் மாற்றுத்திறனாளியான வெங்கடேசன் என்பவர் வெளிமாநில மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்து வருவதாக காவல்துறையினரிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை ட்ரோன் மூலம் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















