வர்த்தகம், முதலீடு, அரியவகை கனிமங்கள் இறக்குமதி தொடர்பாக தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
நடப்பாண்டுக்கான ஜி – 20 அமைப்பின் உச்சி மாநாடு தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பாரம்பரிய அறிவு களஞ்சியம் அமைப்பது, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம் தொடங்குவது உள்ளிட்ட யோசனைகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசாவை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும், வர்த்தகம், கலாசாரம், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, அரிய கனிமங்கள் போன்ற துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















