அகமதாபாத்திலிருந்து லக்னோ சென்ற விரைவு ரயிலில் இசைக்குழுவினர் பயணித்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
பொதுவாகப் படங்களில் தான் பயணத்தின் போது பாடல் பாடி, நடனமாடி செல்லும் காட்சிகள் இடம்பெறும். ஆனால் இங்கு உண்மையிலேயே ஒரு ரயில் பயணம் இசை நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து, லக்னோவிற்கு விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் இசைக்குழு ஒன்றும் பயணித்தது.
தொடர்ந்த அந்த இசைக்குழு இசையுடன் பாடல் பாடி மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்ந்தது.
இதைப் பார்த்த சக பயணிகளும் அவர்களுடன் இணைந்து பாடல் பாடி பயணத்தை மகிழ்ச்சியாக மேற்கொண்டனர். ரயில் பயணத்தை இசை நிகழ்ச்சியாக மாற்றிய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
















