எடப்பாடி அருகே புதுமண தம்பதி தென்னங் கன்றுகளை நட்டுவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சேலம் மாவட்டம் திசைவிளக்கு கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் ஹரிதாவுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
பின்னர் இருவரும் ஊர்வலமாகச் சென்று பசுமை இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தென்னங்கன்றுகளை நட்டுவைத்தனர்.
இதேபோல் எடப்பாடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் புதுமண தம்பதி செண்டை மேளம் வாசித்து மகிழ்ந்தனர்.
















