பள்ளிக்கூட மாணவர்களை கிறிஸ்தவ சினிமா படத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவத்திற்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!
Oct 1, 2026, 01:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளிக்கூட மாணவர்களை கிறிஸ்தவ சினிமா படத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவத்திற்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 02:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேலூரில் பள்ளிக்கூட மாணவர்களை கிறிஸ்தவ சினிமா படத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவர்களை கேரளாவில் வெளியான திரைப்படத்தை காண பள்ளி நிர்வாகம் அழைத்துச் சென்றதாகவும், திரையரங்க வாசல் முன்பு நின்று பாதிரியார் ஒருவர் வரவேற்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானதாகவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் படிக்கும் பள்ளியிலிருந்து கிறிஸ்தவ மதத்தினை பரப்பும் திரைப்படத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்வது என்பது எந்த மதசார்பின்மை கணக்கில் சேரும் என வினவியுள்ள அவர், பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கடந்தாண்டு பள்ளி ஒன்றில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு உரையாற்றியபோது மதசார்பின்மைக்கு ஆபத்து என்று திமுக அரசுக் குரல் கொடுத்ததாகக் கூறியுள்ள அவர், கிறிஸ்தவ மதத்தை தூக்கி பிடிக்கும் படத்திற்கு அழைத்துச் சென்றதை கல்வி அமைச்சர் கண்டிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றும், பிஞ்சு குழந்தைகளின் மனதில் மதமாற்றம் எனும் நஞ்சை விதைக்கும் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இந்துக்கள் தம் குழந்தைகளை மதமாற்ற சக்திகளின் தந்திரத்தில் இருந்து பாதுகாத்துகொள்ள வேண்டும் எனக் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.

Tags: DMKSchoolKadeshwara Subramaniam condemns the incident of taking school students to a Christian movie
Share
Tweet
SendShare
Previous Post

சிந்து நதி நீர் ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் – இஷாக் தார்

Next Post

சேலம் : மரக்கன்று நட்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுமண தம்பதி!

Related News

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தரிசன அனுமதி வழங்கியதில் முறைகேடு ?

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies