மத்தியப் பிரதேசத்தின் பன்னா புலிகள் காப்பகத்தில் 57 வயதான அனார்கலி யானை ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பன்னாவில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு அனார்கலி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த யானை சோனேபூரிலிருந்து இருந்து, கடந்த1986 ஆம் ஆண்டு பன்னா காப்பகத்திற்கு அழைத்து வரப்பட்டது. தற்போது 57 வயதான அனார்கலி யானை ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் யானை குட்டிகளை ஈன்றுள்ளது.
பன்னா புலிகள் காப்பக வரலாற்றில் ஒரு யானை 3 மணி நேரத்திற்குள் 2 குட்டிகளை பெற்றெடுப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்பட்டுள்ளது.
புதிதாகப் பிறந்த குட்டிகளின் வருகையுடன், பன்னா புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
















