மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் கண்காட்சிக்காகப் பழைய பொருட்களை வைத்துக் கலைப்படைப்புகளை உருவாக்கும் பணியில் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உபயோகப்படுத்தியதற்கு பின் பழைய பொருட்களை தூக்கி எறிவதே மக்களின் மனநிலையாக உள்ளது.
ஆனால் பழைய பொருட்களின் நினைவை பிரதிபலிக்கும் விதமாக அவற்றை கொண்டு ஜபல்பூரில் கலைப்படைப்புகளை உருவாக்கிக் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 50-க்கும் மேற்பட்ட அற்புதமான கலைப்படைப்புகளை ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கி வருகின்றனர்.
4 டன் எடையுள்ள பிரமாண்ட நர்மதா தேவி சிலை, பறவை, நடனமாடும் பெண், பல வரலாற்று மற்றும் பாரம்பரிய கட்டமைப்புகளையும் கலைஞர்கள் தனித்துவமாக உருவாக்கி வருகின்றனர்.
தொடர்ந்து வண்ணம் தீட்டி இறுதி கட்டமைப்பு முடிந்த பின் படைப்புகள் காட்சிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















