பஹல்காம் தாக்குதல் காரணமாக மூடப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் ட்ருங் சுற்றுலா தளம் 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலா தளமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, தி ரெசிஸ்டென்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது.
இதையடுத்து கடந்த ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதல் காரணமாக ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன.
பாராமுல்லா மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான குல்மார்க்கில் உள்ள ட்ருங் சுற்றுலா தள மையம் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களைக் கண்டு ரசித்து வருகின்றனர்.
















