ஆஸ்திரேலியாவை தொடர்ந்து மலேசியாவும், சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடை செய்யத் திட்டமிட்டுள்ளது.
சிறுவர்களை இணைய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில், மலேசிய அரசு இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, 2026 முதல் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மலேசியாவில் தடை செய்யப்படவுள்ளது.
இந்த விதிகளை மீறி, சிறுவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பராமரிக்க அனுமதிக்கும் பெற்றோர் மீது அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
















