திருத்துறைப்பூண்டியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை நீடித்து வரும் நிலையில், அதிகபட்சமாகத் திருத்துறைப்பூண்டி பகுதியில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கனமழை காரணமாகத் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் மழை நீர் புகுந்துள்ளதால், பக்தர்கள் மழை நீரில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோயிலில் புகுந்துள்ள மழை நீரை மோட்டார் மூலம் நகராட்சி ஊழியர்கள் வெளியேற்றி வரும் நிலையில், தொடர் மழை காரணமாகக் கோயிலுக்குள் மழை நீர் வந்தவண்ணம் உள்ளதாகப் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
















