டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட தங்க கடிகாரம் சுமார் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.
டைடானிக் கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவ்வப்போது ஏலம் விடப்படுகின்றன.
அந்த வகையில் அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் தங்க கடிகாரம், இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலம் விடப்பட்டது.
இந்தக் கடிகாரம் சுமார் 20 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இது டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப்பொருட்களின் அதிகபட்ச ஏலத்தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
















