தென்காசி மாவட்டம் இடைகால் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு மோதிய கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்
கோவில்பட்டியில் இருந்து தென்காசியை நோக்கி எம்.ஆர்.கோபாலன் என்ற தனியார் வந்து கொண்டிருந்தது.
இதேபோல் கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்தும் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தது. தென்காசி மாவட்டம் துரைசாமிபுரத்தில் வந்தபோது 2 தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் 7 பேர் உயிரிழந்தனர். 40 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், எஸ்பி அரவிந்த் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய கேஎஸ்ஆர் என்ற தனியார் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
















