சிவகங்கையில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் பொருட்கள் சேதமடைந்தன.
சிவகங்கை காந்தி வீதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான புதிய கட்டடம் கட்டுமான பணியை கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்த நிலையில், நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கூட்டுறவு வங்கியின் புதிய கட்டடத்திற்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் அருகேயுள்ள வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.
பீரோ உள்ளிட்ட பொருட்கள் தண்ணீரில் மூழ்கியதாக வீட்டின் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாகக் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறை கூறியுள்ளார்.
















