தமிழகத்தில் 96 . 22 சதவீத எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
நவம்பர் 4ஆம் தேதி முதல் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வாக்காளர்களுக்கு மாநில அரசு பணியாளர்களால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 96.22% எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மாலை 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
















