தகுதியான வாக்காளர்களை பட்டியலில் இருந்து காரணமின்றி நீக்க முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
“வாக்காளர்களை காரணமின்றி நீக்க முடியாது என்றும் 6.16 கோடி வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். படிவம் வழங்கப்பட்டுள்ளது என்று அர்ச்சனா பட்நாயக் குறிப்பிட்டார்.
எஸ்ஐஆர் படிவம் வழங்குவதில் கால நீட்டிப்பு செய்யப்படாது என்றும் பிற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் இடம்பெயர்ந்திருந்தால், அவர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறலாம் என்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் ஓட்டுரிமை பெறுவதற்கு இதுவரை 869 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.
தகவல்கள் சரியாக இருந்தால் படிவங்கள் நிராகரிக்கப்படாது என்றும் பட்டியலில் இருந்து வாக்காளர் பெயர் நீக்கப்பட்டால் உரிய காரணம் தெரிவிக்கப்படும் என்று அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
















