அமெரிக்காவின் டெக்சாஸில் படகு சவாரியின் போது செல்போன் சத்தத்தை குறைக்க சொன்னதால் இந்திய குடும்பத்தினர் உட்பட 8 பேர் மீது அமெரிக்க பெண் பெப்பர் ஸ்பிரே அடித்துள்ளார்.
டெக்சாஸின் சான் அன்டோனியோவில் உள்ள சுற்றுலா தலத்தில் ரிவர் வாக் படகில் இந்தியாவை சேர்ந்த குடும்பத்தினர் உட்பட பலர் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது டெக்சாஸை சேர்ந்த பெண் ஒருவர் அதில் பயணித்த நிலையில் செல்போன் சத்தத்தை குறைக்குமாறு படகோட்டி தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் கோபமடைந்து வசைபாடத் தொடங்கினார். இதையடுத்து அவரை படகில் இருந்து இறக்கி விட்ட நிலையில் அவரது தனது பையில் வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்துப் படகில் பயணித்த குழந்தை உட்பட 8 பேர் மீது அடித்துள்ளார்.
பெப்பர் ஸ்பிரே பட்டதில் குழந்தை உட்பட 8 பேரும் அவதிக்குள்ளான நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்த தப்பியோடிய அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
















