புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே தொடர் மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர்மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
அதேபோல் ரெகுநாதபுரம் அருகே புது விடுதி கிராமத்தில் உள்ள பணையகுளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி விளைநிலங்களை சூழ்ந்தது.
இதனால், அப்பகுதியில் 25 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 45 நாட்களே ஆன நெற்பயிர்கள் முழுமையாகத் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உரிய நிவாரணமும் இழப்பீட்டையும் வழங்க வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















