தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்திலும் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















