அமெரிக்காவின் நியூயார்க் புருக்ளின் பாலத்தில் மோதிச் சேதமடைந்த மெக்சிகன் கடற்படை பயிற்சி கப்பல் சீரமைப்புக்கு பின் தாயகம் திரும்பி உள்ளது.
கடந்த மே மாதம் குவாஹ்டெமோக் என்ற மெக்சிகன் கடற்படைப் பயிற்சி கப்பல் நியூயார்க்கின் புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தின் அடிப்பகுதியில் சென்றபோது விபத்துக்குள்ளானது.
இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 22 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு பின் சேதமடைந்த மெக்சிகன் கடற்படையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் ஆறுமாதங்களுக்கு பிறகு, சேதமடைந்த குவாஹ்டெமோக் கடற்படை பயிற்சி கப்பல் சீரமைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து இக்கப்பல் தற்போது மீண்டும் தனது தாயகமாக மெக்சிகோவின் துறைமுகத்தை அடைந்துள்ளது.
குவாஹ்டெமோக் கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த போது அந்நாட்டின் கடற்படையினர் உற்சாகமாக வரவேற்றனர்.
















