சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு தீர்மானித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர்களின் தங்கத் தகடுகள் சீரமைப்பு பணிகளுக்காகச் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, திருடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் தங்கத்தகடுகளை உருக்கிச் சென்னையில் விற்பனை செய்ததோடு, தங்கமுலாம் பூசிய போலி தகடுகளை மாற்றி வைத்தது அம்பலமானது.
மேலும், விசாரணையை தீவிரப்படுத்திய சிறப்பு புலனாய்வு குழு நடிகர் ஜெயராமிடம், உன்னிகிருஷ்ணன் போத்தி தங்க தகடுகள் விற்பனை செய்யததை கண்டறிந்தனர்.
இது தொடர்பாகச் சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமிடம் விசாரணை மேற்கொள்ளச் சிறப்பு புலனாய்வுக் குழு தீர்மானித்துள்ளது.
















