ஆந்திர மாநிலம், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு அவதார திருநாள் அன்பளிப்பாக, தங்க ஆபரணம், பட்டாடை உள்ளிட்டவை திருப்பதி மலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், கார்த்திகை பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய நாளான பஞ்சமி தீர்த்த உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும்.
இதனையொட்டி பத்மாவதி தாயாரின் அவதார திருநாளை முன்னிட்டு, திருப்பதி மலையில் இருந்து தங்க ஆபரணம், பட்டாடைகள் உள்ளிட்டவை திருச்சானூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் தலையில் சுமந்தபடி கொண்டு சென்றனர்.
















