வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நெல்லூர்பேட்டை பெரிய ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
நெல்லூர் பேட்டை பகுதியில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த ஏரி நீரை நம்பி உள்ளனர்.
இந்நிலையில், சிலர் இந்த ஏரியில் இறைச்சி கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டி செல்கின்றனர். அவர்கள் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், ஏரியையும் சுத்தம் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















