“நான்கு குணங்களை கொண்ட விக்ரஹத்தை வழிபடுவதன் வாயிலாக, நல்ல குணங்கள் பக்தர்களுக்கும் கிடைக்கும்” என, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பார தீ சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள உத்தர குருவாயூரப்பன் கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு சுவாமி வழிபாடு செய்தார்.
பின்னர் பேசிய அவர், விக்ரஹம் என்பதன் பொருள் நான்கு குணங்கள் என்று குறிப்பிட்டார்.
அதில் ஒன்று, விக்ரஹம் யார் மீதும் வேற்றுமை பாராட்டாது; யாரிடமும் யாசகம் கேட்காது, மற்றவர் பேரில் அபிப்ராயம் இல்லாமல் இருப்பது, ஒருவருடைய அழைப்பு இல்லாமல் உற்சவ விக்ரஹம் வெளியே செல்வது இல்லை என விளக்கினார்.
இந்த நால்வகை நற்குணங்களை பிரதிபலிக்கும் விக்ரஹத்தை, தொடர்ந்து வழிபடுவதால், பக்தர்களுக்கு நல்ல குணங்கள் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
















