போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் சர்புதீனின் தொடர்புகள் குறித்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்கள் முன் சென்னை விமானநிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பெண்களை கைது செய்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி சர்புதீன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அதில் சார்புதீன் நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் எனத் தெரியவந்தது.
இதையடுத்து சர்புதீனின் போதைப்பொருள் கடத்தல், மற்றும் அவருடன் தொடர்பில் உள்ள நபர்கள்குறித்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















