ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்கில் உறைபனியால் மரங்கள், செடிகளின் இலைகள்மீது கண்ணாடிபோல் பனி படர்ந்துள்ளது.
இந்தியாவின் முக்கிய கோடை வாசஸ்தலமான காஷ்மீர் யூனியன் பிரதேசம் கடுமையான பனியில் உறைந்து போயுள்ளது.
பிரதேசம் எங்கும் வெப்பநிலை கடுமையாகச் சரிந்து மைனஸ் நிலையில் உள்ளது. இதனால் பல பகுதிகளில் பனி உறைந்து காணப்படுகிறது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாகப் பல இடங்கள் வெண்பனியால் மூடப்பட்டுள்ளன.
அனந்த்நாக் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செடிகள், மரங்களின் இலைகள் கண்ணாடி இழைகள் போல் உறைந்து காணப்படுகின்றன.
கடும் குளிர் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
















