அயோத்தி ராமர் கோயில் இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் சுயமரியாதைக்கான சின்னம் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய அவர், கொடியேற்றம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்றும், ராம பக்தர்களின் சார்பாகப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இந்தப் பிரமாண்டமான கோவில் 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் சுயமரியாதையின் சின்னம் என்றும், தர்மத்தின் ஒளி அழியாதது என்பதற்கும், ராம ராஜ்ஜியத்தின் கொள்கைகள் காலத்தால் அழியாதவை என்பதற்கும் இந்தக் கொடி சான்றாகும் எனவும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.
















