திமுக அரசு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லையெனப் பாஜக தேசிய சிறுபான்மை பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வேலூர் இப்ராஹிம் மக்களுடன் இணைந்து ஆட்சியரிடத்தில் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனில், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.
















