ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் ஆக்டேவியா RS பெர்ஃபாமன்ஸ் செடானின் டெலிவரியை தொடங்கியுள்ளது.
CBU முறையில் முழுவதுமாக இறக்குமதி செய்து இந்தச் செடானை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
முதற்கட்டமாக 100 யூனிட்டுகளை மட்டுமே இந்தியாவிற்குக் கொண்டு வர ஸ்கோடா திட்டமிட்ட நிலையில், வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே 100 யூனிட்டுகளும் விற்பனையாகி அசத்தியிருக்கிறது. இதன் எக்ஸ் ஷோரும் விலை 49 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாகும்.
















