கோவையில் முதலைமைச்சர் கலந்து கொள்ளும் விழாவிற்காகத் திமுகவினர் பொதுமக்களை அரசு பேருந்துகளில் அழைத்துச் சென்றதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அவதியடைந்தனர்.
கோவையில் செம்மொழி பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனிடையே, முதலமைச்சரை வரவேற்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுகவினர் அரசுப் பேருந்துகளை ஆக்கிரமித்துப் பொதுமக்களை அழைத்து வந்துள்ளனர்.
இதனால் வழக்கமான வழித்தடத்தில் செல்லப் போதிய பேருந்துகள் இல்லாததால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லக்கூடிய மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
















