திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழையால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன.
திருவாரூர், நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாகக் கனமழை பெய்தது.
இதன் காரணமாகத் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்திருந்த நிலையில், நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, தமிழக அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















