சென்னையில் ஹவாலா பணம் 9 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த சையது முகமது என்பவர், அபிராமபுரத்தில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றின் அருகே 9 லட்சம் ரூபாய் பணம் அடங்கிய பையுடன் நின்றுள்ளார்.
அந்தப் பணம் ஹவாலா பணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அரிவாளை காட்டி மிரட்டிச் சையது முகமதுவிடம் இருந்த பணப் பையை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாண்டியராஜன் என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 9 லட்சம் ரூபாய் பணம், அரிவாள், இருசக்கரவாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கில் தொடர்புடைய மாறன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
















