மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மலாக்கா ஜலசந்தியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்கிறது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுப் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேபோல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கையில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும் எனவும் அதற்கடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
















