தாமிரபரணி ஆற்றில் 32 ஆயிரம் கனஅடி நீர்வரத்து உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் கொக்கிரகுளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் ஆய்வு செய்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், நேற்று முன்தினம் 19 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 32 ஆயிரத்து 787 கனஅடியாக உயர்ந்துள்ளதாகக் கூறினார்.
தாமிரபரணி ஆற்றில் 60 ஆயிரம் கனஅடி நீர் பாய்ந்தால் மட்டுமே நகருக்குள் நீர் புகும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது பாதுகாப்பான அளவிலேயே வெள்ளம் செல்வதாகக் குறிப்பிட்டார். இதனால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என ஆட்சியர் சுகுமார் தெரிவித்தார்.
















