தொழில் நிறுவனங்கள் செய்யும் சிறு பிழைகளுக்குக் கூட கிரிமினல் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் சட்டங்களை நீக்குவதற்காகவே “ஜன் விஸ்வாஸ்” சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ளூர் வர்த்தகர்களிடம் பேசிய அவர், ஜன் விஸ்வாஸ் சட்டத்தின் மூன்றாம் பதிப்புக்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், வர்த்தகர்களும் மாற்ற வேண்டிய சட்டப்பிரிவுகளைக் கண்டறிந்து, அமைச்சகத்திடம் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
















