டெல்லியில் 6 வயது சிறுவனை பிட்புல் நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பிரேம் நகர் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, அண்டை வீட்டாரின் பிட்புல் நாய் கடித்து குதறியது. இதில் சிறுவனின் காது துண்டிக்கப்பட்ட நிலையில், தலையின் பின்புறமும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டான்.
இந்தச் சம்பவத்தில் நாயின் உரிமையாளரை கைது செய்துள்ள அதிகாரிகள், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் பிட்புல் நாயைக் பிடித்து, விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு மையத்திற்கு அனுப்பியுள்ளனர்.
அந்த நாய் மீண்டும் விடுவிக்கப்படாது என்றும் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம், செல்லப் பிராணிகளைப் பராமரிப்பது மற்றும் அதற்கான உரிமம் பெறுவது குறித்து டெல்லியில் தீவிர விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
















