பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஆப்கனைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான், உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இதனால், இருநாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், கத்தார், துருக்கி நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக, போர் பதற்றம் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், பக்டிகா, கோஸ்ட், குனார் மாகாணங்களில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
இதனால், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் என்பது ஆப்கானிஸ்தான் இறையாண்மை மீதான நேரடி தாக்குதல் என்றும், இதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் தலிபான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
















