2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில், அதிக சீட்டு கேட்டுப் பெறுவதில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் உறுதியாக உள்ளதாக அக்கட்சியின் மாவட்ட மேலிடப் பார்வையாளர் அனில் போஸ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் உள்ள அலுவலகத்தில் காங்கிரஸ் மாவட்ட மேலிடப் பார்வையாளர் அனில் போஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களடம் பேசிய அவர், மாவட்ட தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வந்துள்ளதாகக் கூறினார்.
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கட்சி வெற்றி பெற்றதாகவும், கேரள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தமிழக சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியில் அதிக சீட்டு கேட்டுப் பெறுவதில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் உறுதியாக உள்ளனர் என அனில் போஸ் கூறியுள்ளார்.
















