திருவண்ணாமலையில் உயர் அழுத்தப் புதைவட மின் கம்பியைப் பூமிக்கு அடியில் கொண்டு செல்லாமல், சாலையின் மேற்பகுதியில் சிமெண்ட் குழாய் வழியாக எடுத்துச் செல்வதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாநகராட்சி பெரியார் சிலை எதிரே உள்ள கட்டபொம்மன் தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன.
திருவண்ணாமலை மாநகராட்சியில் தற்போது மின் கம்பங்களை அகற்விட்டு, உயர் அழுத்தப் புதைவட கம்பிகள் மூலம் மின்சாரம் வழங்கப்படும் நிலையில், கட்டபொம்மன் தெருவில் பூமிக்கு அடியில் உயரழுத்த புதைவட மின்கம்பியை எடுத்துச் செல்லவில்லை என்றும், சாலையின் மேற்பகுதியில் சிமெண்ட் குழாய்கள் வழியாக மின்வயர்கள் எடுத்துச் செல்லப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வீடுகளுக்குள் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வெளியே எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
















