பாட்டிலை திரும்பப் பெறும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்திச் சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது.
பாட்டிலை திரும்பப் பெறும் திட்டம் கூடுதல் பணி சுமையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள நிர்வாகிகள், திட்டத்தைச் செயல்படுத்த பிரத்யேக ஊழியர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை வலியுறுத்தி, இன்று மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
















