திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே காலி நிலத்தில் தீப்பற்றி எரிந்த கார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பச்சம்பாளையம் பகுதியில் காலி நிலத்தில் கார் தீப்பற்றி எரிவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்குச் சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து காரின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















