மும்பை தாக்குதலில் இன்னுயிரை தியாகம் செய்த துணிச்சல் மிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக எக்ஸ் பக்கத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதிவிட்டுள்ளார்.
வீரர்களின் தியாகத்தை தேசம் நன்றியுடன் நினைவுக்கூர்கிறது என்றும், அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம் எனவும் கூறியுள்ளார்.
மேலும், வலுவான மற்றும் வளமான பாரதத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் முன்னேற்றப் பாதையில் ஒன்றாக முன்னேறுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
















