சீனாவின் துலான் ஏரி ஈர நிலப்பூங்காவிற்கு அரிய வகை பறவைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வருகை தந்து சுற்றி திரியும் ரம்மியமான காட்சிகள் வைரலாகி உள்ளது.
வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் கைதாம் படுகையில் அமைந்துள்ள துலான் ஏரி, பாதுகாக்கப்பட் பகுதியாகவும், தேசிய ஈரநில பூங்காவாகவும் உள்ளது.
இது அரிய பறவைகள் மற்றும் சீனாவில் முதல் தரப் பாதுகாக்கப்பட்ட இனமான டோல் எனப்படும் ஆசிய காட்டு நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு ஒரு குறிப்பிடத் தக்க வாழ்விடமாகவும் திகழ்கிறது.
இந்தப் பூங்காவில் சால்ட்வார்ட் ஈரநிலங்கள் மற்றும் கண்ணாடி ஏரிகள் போன்ற தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளன.
இந்தப் பூங்கா உப்புச் செடிகளால் உருவாக்கப்பட்ட பருவகால இலையுதிர் காலக் காட்சிக்காகவும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதில் அதன் பங்கிற்காகவும் பெயர் பெற்றது.
பறவைகளுக்கு முக்கிய சரணாலயமாக விளங்கும் இந்தப் பூங்காவிற்கு தற்போது அரிய வகை பறவைகள் மற்றும் மான்கள் உள்ளிட்டவை வருகை புரிந்துள்ள ரம்மியமான காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
















