திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலமலை கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர், விவசாயத்திற்காக அதிகளவிலான கடன்களை பெற்றுள்ளார்.
போதுமான விளைச்சல் இல்லாததால் சுதாகர் பெரும் இழப்பை சந்தித்தாகக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியில் இருந்த சுதாகர், விஷம் அருந்தித் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
















