திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகளை நாளைத் தேவஸ்தானம் வெளியீடுகிறது.
கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக ஜனவரி 8ம் தேதி வரை என மொத்தம் 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்படவுள்ளன.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்கள் ஒரே நேரத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















