கார்த்திகை தீப திருவிழாவின் 3ம் நாளான இன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 24ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினந்தோறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
3ம் நாளான இன்று, திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் பூத வாகனத்திலும் நான்கு மாடவீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
















