நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இங்குக் கடந்த 2001ஆம் ஆண்டுப் பள்ளி கட்டடம் கட்டப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டடம் புனரமைக்கப்பட்டது.
இருப்பினும் தற்போது பெய்த மழையால் வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















